‘பீப்' பாடல் தொடர்பாக சிம்பு மீது பதிவான மற்றொரு வழக்கும் ரத்து


‘பீப் பாடல் தொடர்பாக சிம்பு மீது பதிவான மற்றொரு வழக்கும் ரத்து
x
தினத்தந்தி 25 Feb 2022 2:35 AM IST (Updated: 25 Feb 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

‘பீப்' பாடல் தொடர்பாக சிம்பு மீது பதிவான மற்றொரு வழக்கும் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

நடிகர் சிம்பு பாடியதாக ஒரு ‘பீப்' பாடல் ஒன்று இணையத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்து இருந்ததாகவும் கூறப்பட்டது. பெண்களை அவதூறாக விமர்சனம் செய்து இந்த பாடல் பாடப் பட்டுள்ளதாக பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தன.இதுகுறித்து சென்னையிலும், கோவையிலும் போலீசில் புகார் செய்யப்பட்டன. இந்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக இரு வழக்குகளை கடந்த 2015-ம் ஆண்டு பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சிம்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகர் சிம்பு மீது தவறான தகவலின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு உள்ளதாக கூறி அறிக்கை தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக்கொண்டு சிம்பு மீதான 2-வது வழக்கையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story