தாம்பரம், ஆவடி கூடுதல் கமிஷனர்களாக பெண் ஐ.ஜி.க்கள் நியமனம்


தாம்பரம், ஆவடி கூடுதல் கமிஷனர்களாக பெண் ஐ.ஜி.க்கள் நியமனம்
x
தினத்தந்தி 25 Feb 2022 3:19 AM IST (Updated: 25 Feb 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் கூடுதல் கமிஷனர்களாக 2 பெண் ஐ.ஜி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை,

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு முதல் கூடுதல் கமிஷனர்களாக பெண் ஐ.ஜி.க்கள் 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதன்படி தாம்பரம் கூடுதல் போலீஸ் கமிஷனராக மாநில குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக பதவி வகிக்கும் காமினி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போக்குவரத்து மற்றும் தலைமையகப்பிரிவை கவனிப்பார்.

இதேபோல ஆவடி போலீஸ் கமிஷனரக போக்குவரத்து மற்றும் தலைமையக கூடுதல் கமிஷனராக மாநில அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.விஜயகுமாரி பதவி ஏற்கிறார். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்தது.

சூப்பிரண்டு ஜெயக்குமார் மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு சூப்பிரண்டாக மாற்றப்பட்டு உள்ளார். புதிய போலீஸ் சூப்பிரண்டாக, சென்னை தலைமையக துணை கமிஷனர் பாலாஜி சரவணன் பொறுப்பு ஏற்கிறார்.

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் பெரும் சிக்கலில் சிக்கி இருந்த சமயத்தில், ஜெயக்குமார் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்றார். அவரது சிறந்த பணியால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சிக்கலில் இருந்து மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story