குன்னூர்;அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் என்று பல பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்துசெல்வர்.
இந்தநிலையில் இன்று நள்ளிரவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருந்து பொருட்கள் வைக்கும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து மருத்துவமனை ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் மருத்துவமனையில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடிக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ முழுவதும் அணைக்கப்பட்டாலும் மருத்துவமனையின் மருந்து பொருட்கள் வைக்கும் கட்டிடம் முழுவரும் எரிந்து சேதம் அடைந்தது.
நல்ல வேளையாக அந்த கட்டிடத்தில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமானது.
தற்போது இந்த தீ விபத்து குறித்து கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்து பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story