அரை நிர்வாணத்துடன் பெண்களை அச்சுறுத்தும் வடமாநில தொழிலாளர்கள்


அரை நிர்வாணத்துடன் பெண்களை அச்சுறுத்தும் வடமாநில தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 25 Feb 2022 12:19 PM IST (Updated: 25 Feb 2022 1:47 PM IST)
t-max-icont-min-icon

அரை நிர்வாணத்துடன் பெண்களை அச்சுறுத்திவரும் வடமாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி,

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி நஞ்சை ஊத்துக்குளியில் தீவன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகின்றது.  இந்த தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 

இந்த தொழிற் சாலையில் பணி செய்யும் வடமாநில தொழிலாளர்கள் நஞ்சை ஊத்துக்குளி, சாவடிப்பாளையம், சின்னியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசித்துவருகின்றனர். 

இந்த நிலையில் தொழிற்சாலைக்கு பின்பகுதியில் வசித்துவரும் பெண்களிடம் தொழிற்சாலையில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் அரை நிர்வாணத்துடன் கையில் பணத்தை வைத்து கொண்டு தவறான செய்கைகள் மூலம் அழைத்ததா அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இதனை அறிந்த மொடக்குறிச்சி போலீசார், தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது தொழிற்சாலையின் பின்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க அறிவுறுத்தி போலீசார், மேலும் தவறான செயலில் ஈடுபடும் தொழிலாளர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

அரை நிர்வாணத்துடன் பெண்களுக்கு தவறான செய்கை காட்டிய வடமாநில தொழிலாளர்களால் அப்பகுதி பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்ப்பட்டு உள்ளது. 

Next Story