தமிழகத்தில் 507 பேருக்கு கொரோனா: சென்னை, வேலூரில் 3 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் 507 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை, வேலூரில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 65 ஆயிரத்து 768 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 292 ஆண்கள், 215 பெண்கள் என மொத்தம் 507 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 133 பேரும், கோவையில் 76 பேரும், செங்கல்பட்டில் 58 பேரும், திருவள்ளூரில் 23 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்த பட்சமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தென்காசியில் தலா ஒருவரும், அரியலூர், கள்ளக்குறிச்சி, தேனி, திருப்பத்தூரில் பாதிப்பு இல்லை.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதில் 12 வயதுக்கு உட்பட்ட 46 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 85 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 30 லட்சத்து 46 ஆயிரத்து 52 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 48 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 1,302 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 642 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 210 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று 3 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் சென்னையில் இருவரும், வேலூரில் ஒருவரும் உயிரிழந்தனர். 36 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரம் பேர் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,794 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 8 ஆயிரத்து 150 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story