ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை...!


ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை...!
x
தினத்தந்தி 26 Feb 2022 9:16 AM IST (Updated: 26 Feb 2022 9:16 AM IST)
t-max-icont-min-icon

ஆயுதப்படை பெண் போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்த உள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வந்தவர் இந்துமதி (வயது 26). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்துமதி மட்டும் தனது இரண்டு குழந்தைகளுடன் வேலூரில் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் இந்துமதி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இந்துமதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுதப்படை பெண் போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 

Next Story