அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தை எதிர்த்த வழக்கு: அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் இடையீட்டு மனு தாக்கல்


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தை எதிர்த்த வழக்கு:  அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் இடையீட்டு மனு தாக்கல்
x
தினத்தந்தி 26 Feb 2022 4:10 PM IST (Updated: 26 Feb 2022 4:10 PM IST)
t-max-icont-min-icon

அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி பணி நியமனம் வழங்கவில்லை என சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை,

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தை எதிர்த்த வழக்கில் அரசின் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதில் அர்ச்சகர் என்பது சாதி சார்பற்ற பதவி, அதில் பாரபட்சம் இருக்கக்கூடாது, முறையான பயிற்சி உள்ளதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லையென அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் கருதினர்.

இந்நிலையில் ஆகமம் மற்றும் மந்திர பயிற்சிக்கு தேர்வு நடத்தி சான்றுகள் வழங்கிய நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி பணி நியமனம் வழங்கவில்லை என சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Next Story