சென்னை மெரினாவில் ராட்சத அலையில் சிக்கி அண்ணன் - தம்பி பலி..!


சென்னை மெரினாவில் ராட்சத அலையில் சிக்கி அண்ணன் - தம்பி பலி..!
x
தினத்தந்தி 26 Feb 2022 5:26 PM IST (Updated: 26 Feb 2022 5:26 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மெரினா கடற்கரையில் குளிக்க சென்ற அண்ணன் தம்பி ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சுரேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் அணில். இவரது மகன்கள் ஆகாஷ்(வயது 15) மற்றும் ஹரிஸ்(13). அண்ணன்-தம்பி இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்தநிலையில் இன்று சகோதரர்கள் இருவரும், அவர்கள் நண்பர்கள் 7 பேருடன் மெரினா கடலில் குளிக்க வந்தனர்.

இன்று மதிய வேளையில் நண்பர்களுடன் குதுகலமாக குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலையில் சகோதரர்கள் ஆகாஷ் மற்றும் ஹரிஸ் சிக்கிக் கொண்டனர். இதையடுத்த உடனிருந்த நண்பர்கள் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக நீந்தி 2 பேரையும் மீட்க முயன்றனர்.

இருப்பினும் சிறுவர்கள் 2 பேரும் மூச்சு திணறி நடுக்கடலிலேயே உயிரிழந்தனர். இதையடுத்து நீந்தி சென்ற தீயணைப்பு படையினர் 2 பேரின் உடலையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story