தமிழகத்தில் போலியோ பாதிப்பே இல்லாத நிலை உள்ளது - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் போலியோ பாதிப்பே இல்லாத நிலை உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை,
தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் போலியோ பாதிப்பே இல்லாத நிலை உள்ளது. ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடுபடும் குழந்தைகளுக்கு வீடுகளுக்கே சென்று சொட்டு மருந்து செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,என்று கூறினார்.
Related Tags :
Next Story