இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி உயிரிழப்பு...!
இரண்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி சிறிது நேரத்துக்குள் பரிதாபமாக உயிரிழந்தது.
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அண்ணன் பெருமாள் கோயில் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது பசு மாடு ஒன்று இன்று காலை இரட்டைத் தலையுடன் ஒரு கன்று ஈன்றது.
இதனை மாட்டின் உரிமையாளர் ரவி மற்றும் குடும்பத்தினர் வியப்புடன் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த கன்றுக்குட்டி பிறந்த போது நல்ல நிலையில் இருந்தாலும், மாட்டிடம் பால் குடிக்க முடியாமல் தவித்து வந்து.
இப்படி சிறிது நேரம் தாக்குப்பிடித்த அந்த கன்றுக்குட்டி திடீர் என்று உயிரிழந்தது.
இந்த நிலையில் கன்றுக்குட்டி இறந்தது தெரியாத பசுமாடு தான் ஈன்ற கன்றை முட்டி எழுப்பி விடும் முயற்சியில் ஈடுபட்டது. இதனை கண்டு அப்பகுதி பொதுமக்களும் மாட்டின் உரிமையாளரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
Related Tags :
Next Story