உக்ரைன்-ரஷியா போர்- மனித சங்கிலி அமைத்து பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வு பிரசாரம்...!


உக்ரைன்-ரஷியா போர்- மனித சங்கிலி அமைத்து பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வு பிரசாரம்...!
x
தினத்தந்தி 27 Feb 2022 10:49 AM GMT (Updated: 2022-02-27T16:19:44+05:30)

உக்ரை- ரஷியா போர் நிறுத்தம் குறித்து பள்ளி குழந்தைகள் மனித சங்கிலி அமைத்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

ஆனைமலை,

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலையை ஆலங்கடவு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி  ஒன்று உள்ளது. இங்கு சுமார் 38 குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்தப் பள்ளியில் 3 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளியின் முன்பு மனித சங்கிலி அமைத்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது தங்கள் கையில் போரை நிறுத்து, போர் இல்லாத உலகம் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி விடுமுறை நாளாக இருந்த போது குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.

போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி குழந்தைகள் நடத்திய விழிப்புணர்வு பிரசாரம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

Next Story