புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 27 Feb 2022 11:37 PM IST (Updated: 27 Feb 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

விடுமுறை தினத்தையொட்டி புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

விடுமுறை தினத்தையொட்டி புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள்
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நேற்று விடுமுறை தினம் என்பதால் புதுவையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இதனால் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முழுவதும் நிரம்பி வழிந்தன.
புதுச்சேரியில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் நகர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வழக்கத்தை விட அதிகமாக வலம் வந்ததை காண முடிந்தது. இதே போல் கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. 
போக்குவரத்து நெரிசல்
சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியாக புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் பரப்பு, பழைய துறைமுக பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
சண்டே மார்க்கெட்
புதுச்சேரியில் இன்று சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.

Next Story