உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும் தாயகம் திரும்பிய அறந்தாங்கி மாணவி பேட்டி


உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும் தாயகம் திரும்பிய அறந்தாங்கி மாணவி பேட்டி
x
தினத்தந்தி 28 Feb 2022 12:39 AM IST (Updated: 28 Feb 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும் மாணவி கூறினார்.

அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வளையல்கார தெருவை சேர்ந்தவர் விவேக். இவரது மகள் செல்வப்பிரியா (வயது 22). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது அங்கு போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு சிக்கித்தவிக்கும் மாணவர்களை தமிழகம் கொண்டு வர மாணவர்களின் பெற்றோர் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து நேற்று மத்திய அரசு சார்பில், இந்திய மாணவர்களை மீட்டு விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு இருந்து தமிழக மாணவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் சென்னையில் இருந்து தமிழக அரசு சார்பில், அறந்தாங்கி மாணவி செல்வப்பிரியாவை காரில் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து அறந்தாங்கியில் மாணவியை அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உணர்ச்சி பூர்வமாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து மாணவி செல்வபிரியா நிருபர்களிடம் கூறுகையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும், நாடு திரும்ப தனிப்பட்ட முயற்சிகளை எடுக்காமல் இந்திய தூதரகத்தை தொடர்பில் வைத்திருக்க வேண்டும்.  நிச்சயமாக என்னை அழைத்து வந்தது போல் அனைவரையும் மத்திய அரசு பத்திரமாக அழைத்து வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார். 

Next Story