சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு ராகுல்காந்தி இன்று வருகை
சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு ராகுல்காந்தி இன்று வருகை காங்கிரஸ் நிர்வாகிகளுடன் உரையாற்றுகிறார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இன்று(திங்கட்கிழமை) சென்னை வருகிறார். அவர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெறும் விழாவில் இந்த புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த விழா முடிவடைந்தவுடன் ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு மாலை 6 மணியளவில் வருகை தர உள்ளார். இங்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சத்தியமூர்த்திபவன் வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசுகிறார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்பட தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்துகொள்கின்றனர். ராகுல்காந்தி வருகையையொட்டி சத்தியமூர்த்திபவன் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Tags :
Next Story