தமிழக மாணவர்களை மீட்க தனி அலுவலரை நியமிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக மாணவர்களுக்கு உணவு, தண்ணீர், இருப்பிடம், பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.
சென்னை,
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை பத்திரமாக தாயகம் திருப்பி அழைத்து வருவது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் தொலைபேசியில் பேசினார்.
ஜெய்சங்கரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாவது, “உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுக்கு உணவு, தண்ணீர், இருப்பிடம், பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். தமிழக மாணவர்களை மீட்க தனி அலுவலரை நியமிக்க வேண்டும். அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்பன போன்ற விஷயங்களை வலியுறுத்தி பேசினார்.
அவரிடம் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாணவ்ர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்களின் மீட்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில செயலாளர்களிடம் மத்திய அமைச்சரவை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில், மாணவர்களுடைய குடும்பத்தினரிடம் மீட்பு நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Related Tags :
Next Story