குமரியில் சிவாலய ஓட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் தொடங்கியது. இதில் தமிழக, கேரளாவை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஓடினார்கள்.
நாகர்கோவில்,
நாடு முழுவதும் இன்று(செவ்வாய்க்கிழமை) சிவராத்திரி விழா நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் இங்குள்ள 12 சிவாலயங்களை ஓட்டமும், நடையுமாக சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம்.
சிவாலய ஓட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் பலவிதமாக புராண கதைகள் நிலவி வருகின்றன. அதன்படி சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் ஓடும் பக்தர்கள் ஏகாதசியன்று விரதத்தை தொடங்கினார்கள். அன்றிலிருந்து சிவராத்திரி வரை ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டனர்.
சிவாலய ஓட்டம் நேற்று மாலை முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கியது. பின்னர் திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை சிவன் கோவில் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிப்பாகம் மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில், வழியாக இன்று(செவ்வாய்க்கிழமை) நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலை வந்து அடைகிறார்கள்.
கோவிந்தா... கோபாலா...
சிவாலய ஓட்டத்தின் போது பக்தர்கள் காவி உடை அணிந்து கையில் விசிறியுடன், துணிப்பையில் காசுகளுடன் கூடிய பணமுடிச்சுடன், ‘கோவிந்தா... கோபாலா... என்ற திருநாமத்தை கூறி ஓடினார்கள். வழிநெடுகிலும் அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
இந்த ஓட்டத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story