ஜம்மு-காஷ்மீருக்காக தமிழகம் தோளோடுதோள் நின்றதை மறக்கமாட்டோம் உமர்அப்துல்லா பேச்சு
ஜம்மு-காஷ்மீருக்காக தமிழகம் தோளோடு தோள் நின்றதை மறக்க மாட்டோம் என்று உமர் அப்துல்லா பேசினார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உங்களின் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா பேசியதாவது:-
மத சுதந்திரம் மறுப்பு
ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு தொடங்கிய ஒடுக்குமுறை இந்தியா முழுவதும் நடைபெற போகிறது. ஜம்மு-காஷ்மீர் என்கிற எங்களது மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து போட்டு விட்டார்கள்.
இதேபோல் தமிழகம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது என்று திடீரென அறிவிக்கப்படாது என்று என்ன நிச்சயம். மாநிலங்களின் உரிமைகளை முதல்-மந்திரிகளின் உரிமைகளை, சட்டசபைகளின் உரிமைகளை கவர்னர்கள் கைப்பற்றக்கூடும்.
வேற்றுமை கொண்டவர்களாக இருந்தாலும் இந்தியர்களாக நாம் ஒருங்கிணைந்து நிற்கிறோம். மத சுதந்திரம் என்பது தற்போது நாட்டில் ஒடுக்கப்பட்டுள்ளது. நான் எந்த மதகுறியீட்டை பின்பற்ற வேண்டும் என்பதற்கு உரிமை இருக்கிறது. புர்கா, ஹிஜாப் எதை அணிவது என்பது தனிநபரின் அரசியல் சாசன உரிமை. இந்தியாவில் மத சுதந்திர உரிமை என்பது மறுக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் குடும்பமும், எங்கள் குடும்பமும் நீண்ட ஆண்டுகளாக நட்புறவில் இருக்கிறது. என்னை போல ஸ்டாலினும் சிறை வாசத்தை அனுபவித்துள்ளார்.
நன்றி
தமிழ்நாட்டுக்கும், ஜம்மு-காஷ்மீருக்கும் எங்கள் குடும்பத்துக்குமான உறவு பாரம்பரியமானது. என்னுடைய தாத்தா ஷேக் அப்துல்லா தமிழகத்தில்தான் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
காஷ்மீரில் இருந்து வெகுதொலைவில் இருக்கும் தமிழ்நாடும், மு.க.ஸ்டாலினும் எங்களுக்காக குரல் கொடுத்தனர். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக தோளோடு தோளாக நின்று குரல் கொடுத்த தமிழக மக்களுக்கும், தி.மு.க.வுக்கும் நன்றி. இதை நாங்கள் மறக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
துரைமுருகன்
உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-
மு.க.ஸ்டாலின் தனது 13 வயது முதல் நாளை (இன்று) காலையிலே பிறந்தநாள் காணப்போகிற வரையில் பல்வேறு வகையான பரிணாமங்களில் மிளிர்ந்து இருக்கிறார். 13 வயது மாணவனாக இருக்கும் போது இளைஞர் அணியாக பரிணமித்தார். பிறகு இயக்கத்தில் செயல்வீரனாக திகழ்ந்தார்.
தமிழகம் எங்கும் பேச்சாளராக, நாடக நடிகனாக, சினிமா நடிகராக, மேயராக, எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக, செயல் தலைவராக திகழ்ந்தார். பின்னர் தலைவரானார். இன்றைக்கு முதல்-அமைச்சராகி இருக்கிறார். இத்தனை பரிணாமம் எடுத்த மு.க.ஸ்டாலின் தான் ஒரு எழுத்தாளன் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.
என் தலைவர் கருணாநிதியிடம் நாங்கள் எப்படி இறுதி வரை இருந்தோமோ, அதேபோன்று எங்கள் மூச்சு இருக்கும் வரை தலைவா உன்னிடத்தில் நாங்கள் நன்றியோடு இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.பாலு
விழாவில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பேசியதாவது:-
தென்னகத்தில் எங்கள் அன்பு தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒன்று கூடியிருக்கிறீர்களே இந்த நிலை மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும்.
யார் தலைமையில் வேண்டுமானாலும் கூடிக் கொள்ளுங்கள். எல்லோரும் ஒன்று சேருங்கள். நேரடியாக பார்க்கும் போது கட்டிப்பிடித்துக் கொள்கிறோம். வேற்றுமைகளை மறந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொள்ளுகிறோம்.
ஆனால், தேர்தல் வந்தால் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டது போன்று தனித்தனியாக நிற்கின்றோம். இனிமேலாவது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மதவெறியை கொண்டு ஆட்டம் போடுகிற கூட்டத்தை இந்த தடவையோடு முடித்து வைக்க வேண்டும். இனிமேல் அவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்றால் எல்லோரும் ஒன்று சேருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கனிமொழி
விழாவில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எப்படி தலைவர் கருணாநிதியின் ‘நெஞ்சிக்கு நீதி' ஒரு தலைமுறையின் அரசியல் பதிவாக இருந்ததோ அதைபோல் இந்த புத்தகமும்தான் மு.க.ஸ்டாலின் சுவாசித்த அரசியல் காற்றை உங்களில் ஒரு இளைஞராக தளபதி பகிர்ந்து கொள்கிறார்.
அரசியல் மேடையாகட்டும், மனிதர்களாகட்டும் எல்லாவற்றில் இருந்தும் அவர் கற்றுக்கொண்ட பாடத்தை இந்த புத்தகத்தின் வாயிலாக பகிர்ந்து கொள்கிறார்.
. இந்த மேடை என்பது ஒரு புத்தக வெளியீடு நிகழ்ச்சி மட்டும் இல்லை. இந்த நாட்டை மதவாத சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் தளபதிகளின் அணிவகுப்பு. ஆனால் இந்த மேடை வெறும் ‘டிரைலர்’ தான். படம் இனி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story