‘நான் ஒரு இந்து தீவிரவாதி’ என்று பேட்டி கொடுத்தவர் கைது..!
‘நான் ஒரு இந்து தீவிரவாதி’ என்று பேட்டி கொடுத்தவரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன். அவர், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் ஒரு இந்து தீவிரவாதி என்றும், அவ்வாறு சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுவதாகவும், தெரிவித்திருந்தார். மேலும் அவர் அளித்த பேட்டியில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். புகார் கூறப்பட்ட ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். காஞ்சீபுரம் மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கண்ணதாசன் கொடுத்த புகார் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story