மகா சிவராத்திரி விழா: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இன்று விடிய, விடிய பூஜை...!
மகா சிவராத்திரி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நள்ளிரவு விடிய,விடிய அபிஷேக பூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
சென்னை,
சிவபெருமானுக்கு உகந்த மிக முக்கியமான விரதங்களில் இந்த மகா சிவராத்திரியும் ஒன்று. இந்த வருடம் மகா சிவராத்திரி இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால் நினைத்தகாரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிவன் கோவில்கள், மற்றும் பிற கோவில்களிலும் இன்று இரவு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பெரிய கோவில்களில் 4 கால பூஜைகளும், சில கோவில்களில் 6 கால பூஜையும் நடைபெற உள்ளன. சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
மகா சிவராத்திரி விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களில் இரவு முழுவதும் சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story