ஆப்ரேஷன் கங்கா திட்டம்: பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நன்றி...
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் பிரதமர் மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
ரஷிய போரால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.
‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மத்திய அரசின் அயராத நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் பிரதமர் மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
ஆபரேஷன் கங்கா திட்டத்தின்கீழ் நடந்து வரும் முயற்சிகளுக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. அவரது திறமையான தலைமையின் கீழ், உக்ரைனில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் திரும்ப அழைத்து வருவதை உறுதி செய்வதற்காக முழு அரசு இயந்திரமும் 24 மணி நேரமும் உழைத்து வருகிறது.
பல்வேறு நாடுகளுக்கு நான்கு மூத்த அமைச்சர்கள் மற்றும் சிறப்புத் தூதர்கள் நியமிக்கப்பட்டு வெளியேற்றத்தை எளிதாக்குவார்கள் என்பது மத்திய தலைமையின் முன்னுரிமையைப் பிரதிபலிக்கிறது. உக்ரைனின் எல்லைகளுக்கு முதல் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story