ஆம்பூரில் நாய்கள் கடித்து 5 சிறுவர்கள் காயம்..!


ஆம்பூரில் நாய்கள் கடித்து 5 சிறுவர்கள் காயம்..!
x
தினத்தந்தி 1 March 2022 11:39 AM IST (Updated: 1 March 2022 11:39 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் தெரு நாய் கடித்ததில் 5 சிறுவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆம்பூர்,

இன்று காலை பிலால் நகரில் சாலையில் நடந்து சென்ற சிறுவர், சிறுமிகளை நாய்கள் விரட்டிச் சென்று கடித்தன. இதில் 5 சிறுவர் சிறுமிகள் காயமடைந்தனர். இதையடுத்து குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆம்பூரில் அதிகரித்து வரும் நாய் தொல்லையால் அப்பகுதி மக்கள் தெருக்களில் நிம்மதியாக செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. 

நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி அதிகாரிகள் இதுவரை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நாளை பதவியேற்கவுள்ள நகரமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக சேவகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story