ரேசன் கடைகள் செயல்படும் நேர நிர்ணயம் பற்றி தமிழக அரசு புதிய உத்தரவு
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகள் செயல்படும் நேர நிர்ணயம் பற்றிய அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் செயல்படும் ரேசன் கடைகளின் நேரம் நிர்ணயம் பற்றி தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.
இதன்படி, சென்னை, புறநகர் பகுதிகளில் காலை 8.30 முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் 7 மணி வரையிலும் ரேசன் கடைகள் செயல்படும். இதர பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை, இதன்பின்னர் பிற்பகல் 2 முதல் 6 மணி வரையிலும் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story