தஞ்சை நூற்றாண்டு பழமையான யூனியன் கிளப்பிற்கு சீல்..!
தஞ்சையில் நூற்றாண்டு பழமையான யூனியன் கிளப்பிற்க்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தஞ்சாவூர் யூனியன் கிளப் கடந்த 1895 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கிளப் தொடர்ந்து செயல்படுவதற்கான உரிமத்தை சமர்ப்பிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால் உரிமத்தை தாக்கல் செய்ய வில்லை.
இந்த நிலையில் முறையான உரிமையின்றி செயல்பட்டதாக கூறி இன்று காலை யூனியன் கிளப்பிற்கு சீல் வைக்கப்பட்டது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story