சிறுமியை இரண்டாம் திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது..!
திருக்கழுகுன்றம் அருகே 15 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து முயற்சித்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
செங்கல்பட்டு,
திருக்கழுகுன்றம் அருகே வசித்து வந்த 10ம் வகுப்பு படித்த, 15வயது பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி 18ம் தேதி காணமல் போனார். இதுகுறித்து திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் அந்த பெண்ணை தேடிவந்தனர்.
விசாரணையில் கருமாரப்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் குமரேசன் (29) என்பவர் காணாமல் போன 15 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, நகை வாங்கி கொடுத்து திருக்கழுகுன்றத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்திருந்தது தெரியவந்தது. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் திருக்கழுகுன்றம் போலீசார் குமரேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story