மகா சிவராத்திரியை முன்னிட்டு காரைக்கால் அம்மையார் குளக்கரையில் சிவலிங்க பூஜை


மகா சிவராத்திரியை முன்னிட்டு காரைக்கால் அம்மையார் குளக்கரையில் சிவலிங்க பூஜை
x
தினத்தந்தி 1 March 2022 7:56 PM IST (Updated: 1 March 2022 7:56 PM IST)
t-max-icont-min-icon

மகா சிவராத்திரியை முன்னிட்டு காரைக்கால் அம்மையார் குளக்கரையில் சிவலிங்க பூஜை

காரைக்கால்
மகா சிவராத்திரி விழாவையொட்டி காரைக்கால் அம்மையார் குளக்கரையில், தயானந்த சரஸ்வதி சாமிகள் அமைப்பான, தர்ம ரஷணா சமிதி சார்பில்   கூட்டு சிவலிங்க பூஜை நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனர்.
முன்னதாக பூஜைக்கு தேவையான களி மண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான சிவலிங்கம் மற்றும் ருத்ராட்சம், அட்சதை, நிவேதன பிரசாதம், விபூதி, குங்குமம், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, திருநள்ளாறு கோவில் சிவாச்சாரியார் மந்திரங்கள் கூறி பூஜை செய்தார். பக்தர்களும் தாங்களுக்கு வழங்கப்பட்ட சிவலிங்கத்துக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
முன்னதாக இந்த அமைப்பு சார்பில் நிரவி கார்க்கோடபுரீசுவரர் கோவில், காரைக்கால் ஒப்பிலார்மணியர் கோவில், தருமபுரம் யாழ்முறிநாதர் கோவில், நித்தீஸ்வரம் கோவில், மற்றும் பல்வேறு கோவில் வளாகத்திலும் சிவலிங்க பூஜை நடைபெற்றது.
====

Next Story