உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள்; தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி தகவல்
உக்ரைனில் பாதியில் படிப்பை முடித்த மாணவர்களை தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களின் கல்வியை தமிழகத்தில் தொடர்வது குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசிக்கப்படும் என்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களை பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து படிக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story