வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை இன்று 105 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஒவ்வொரு மாத இறுதியிலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை இன்று 105 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 19 கிலோ எடையுள்ள வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2,145.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம் வீட்டு சமையல் எரிவாயும் சிலின்டரின் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.915.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்வால் உணவகம், தேநீர் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story