அ.தி.மு.க. கவுன்சிலர்களை கைது செய்ய தடை கோவை போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
தி.மு.க.வினரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கோவை வெள்ளலூர் பேரூராட்சியின் 3 அ.தி.மு.க. கவுன்சிலர்களை கைதுசெய்ய சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
சென்னை,
கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 15 வார்டுகளில் 8 வார்டுகளை அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது. அந்த வெற்றிக்கொண்டாட்ட ஊர்வலத்தின்போது, தி.மு.க. பிரமுகரையும், அவரது சகோதரரையும் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போத்தனூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சந்திரகுமார், கருணாகரன், கணேசன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அரசியல் உள்நோக்கம்
அவர்களது மனுவில், வெற்றிக்கொண்டாட்டத்திற்கு இடையே இருசக்கர வாகனத்தை நிறுத்தி, தி.மு.க. தொண்டர்கள் தகராறு செய்தனர். ஆனால், நாங்கள் அவர்களை ஆபாசமாக திட்டி தாக்கியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பேரூராட்சி தலைவர் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் எங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று கூறியிருந்தனர்.இந்த ஜாமீன் மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் டி.செல்வம், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் ஆஜராகி மனுதாரர்களை கைது செய்ய போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தடை விதிப்பு
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருகிற 7-ந்தேதி வரை மனுதாரர்களை போலீசார் கைது செய்யக்கூடாது. இந்த ஜாமீன் மனுக்களுக்கு போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த பேரூராட்சியில் வெற்றி பெற்ற மேலும் 5 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்களை போலீசார் பொய் வழக்கில் கைது செய்யக்கூடும். எனவே, எங்களை துன்புறுத்தக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு இல்லை
அப்போது போலீஸ் தரப்பில் இந்த 5 மனுதாரர்கள் மீது வழக்கு நிலுவையில் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story