கடலோர மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. ஆனால் மாலை நேரங்களில் இருந்து அதிகாலை வரையிலும் கடுங்குளிர் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12.6 மி.மீ. மழை பதிவாக வேண்டும்.
ஆனால் இயல்பான அளவை விடவும் 38 சதவீதம் அளவுக்கு குறைந்து 7.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், தென் கிழக்கு வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு
இதுதொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 3-ந் தேதி (நாளை) தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 4-ந் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
சென்னையை பொறுத்தவரை 3-ந் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 2-ந் தேதி (இன்று) தென் வங்க கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடைஇடையே மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். 3-ந் தேதி தென் வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடைஇடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
4-ந் தேதி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, தெற்கு ஆந்திரா கடலோர பகுதி, தமிழக கடலோர பகுதி மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடைடையே மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story