69-வது பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி ஜனாதிபதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினார். அப்போது ‘தமிழக வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும். உங்களுக்கு நீண்ட பொதுவாழ்வு அமையவேண்டும்’ என்றும் அவர் வாழ்த்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் மு.க.ஸ்டாலினிடம், நரேந்திரமோடி கூறி உள்ளார்.
அதற்கு மு.க.ஸ்டாலின், ‘தங்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைப்பேன்' என உறுதி அளித்துள்ளார்.
தமிழக கவர்னர்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினார். மேலும் கவர்னர் சார்பில் கவர்னர் அலுவலக துணை செயலாளர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
ராகுல் காந்தி
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி தொலைபேசியில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ‘நீங்கள் இளமையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழவேண்டும்’, என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஆகியோர் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்தனர்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் ஆ.மணி அரசன் உள்ளிட்டோரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்-மந்திரி என்.ரங்கசாமியும் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு வாழ்த்தினார்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து செய்தியுடன் மலர்க்கொத்து அனுப்பி பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Related Tags :
Next Story