சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 3-வது வாரத்தில் தொடங்குகிறது
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டையும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை,
நடப்பு ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெற்றது.
அந்த கூட்டத்தொடரில் 15 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
சிறப்பு கூட்டம்
இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிவிட்டார். எனவே அந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டசபை சிறப்புக் கூட்டம் கடந்த மாதம் (பிப்ரவரி) 8-ந் தேதி நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்ட மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடர்
இந்தநிலையில் மத்திய பட்ஜெட் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எனவே தமிழக அரசின் பட்ஜெட்டை தயார் செய்வதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் அவற்றுக்கான சங்க பிரதிநிதிகளுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டது.
மேலும் வேளாண்மை பட்ஜெட்டை தயாரிப்பதற்காக வேளாண்மை துறை தீவிரம் காட்டி வருகிறது. வேளாண் சங்கங்கள், விவசாயிகள் மற்றும் அதன் தொடர்புடைய நிபுணர்களுடன் கலந்தாலோசனை செய்து அவர்களின் கருத்துகளை வேளாண்மைத்துறை பெற்றுள்ளது.
இந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 3-வது வாரத்தில் தொடங்க கூடும் என்று சட்டசபை வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் பட்ஜெட் 18-ந் தேதியன்றும், வேளாண்மை பட்ஜெட் 19-ந் தேதியன்றும் தாக்கல் ஆக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண்மைத் துறை பட்ஜெட்டை அந்தத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்வார்கள்.
அனல் பறக்கும்
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள், திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக நடந்த கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதுதொடர்பான உறுதியை அளித்திருந்தார். எனவே அதை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். தமிழக அரசின் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்காக அமைச்சரவை கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது உள்பட பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள், வெளிநடப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலெக்டர் மாநாடு
அதற்கு முன்னதாக, அடுத்த வாரத்தில் முதல்-அமைச்சர் தலைமையில், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளின் மாநாட்டை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் இந்த மாநாட்டை கடந்த அரசு நடத்தி இருந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளாக இது நடத்தப்படவில்லை.
இந்த ஆட்சியில் நடத்தப்படும் முதல் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மாநாடு இதுவாகும். அடுத்த வாரம் 3 நாட்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த கூட்டம் நடத்தப்படும் என்று தெரிகிறது. முதல் நாளில் கலெக்டர்களுக்கும், 2-ம் நாளில் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும், 3-ம் நாளில் 2 தரப்பினரை இணைத்தும் கூட்டம் நடத்தப்படும்.
மாநாட்டின் தொடக்கத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உரை நிகழ்த்துவார். அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தொய்வு நிலை போன்றவற்றை இந்த மாநாட்டில் தலைமைச்செயலாளர் சுட்டிக்காட்டி பேசுவது வழக்கமாகும்.
தொடக்க உரை மற்றும் நிறைவுரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்துவார். அப்போது பல்வேறு அறிவுரைகளை அவர் வழங்குவார். இந்த மாநாட்டிற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story