போலீசாரின் உயிரை காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்...!
பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீசார் ஒருவரின் உயிரை பெண் இன்ஸ்பெக்டர் காப்பாற்றி உள்ளார்.
சென்னை
மனிதநேயம் மிக்கவர், துணிச்சல்காரர் என்றெல்லாம் பராட்டப்பட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் விருது பெற்றவர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி. இவர் தற்போது பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றுகிறார்.
அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சரவணன் என்ற போலீஸ்காரர், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார்.
அவரது மூக்கில் இருந்து நிற்காமல் ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது. இதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி சற்றும் தாமதிக்காமல் போலீஸ்காரர் சரவணனை தனது போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், போலீஸ்காரர் உயிர் பிழைத்தார். இதற்காக இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை மருத்துவர்கள் பாராட்டினார்கள். ராஜேஸ்வரிக்கு உயர் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story