மாணவிகளை டிக் டாக் எடுத்த மாணவர்கள்; தட்டிகேட்ட ஆசிரியருக்கு அடி உதை
கன்னியாகுமரி அருகே மாணவிகளை டிக் டாக் எடுத்த மாணவர்களிடம் தட்டிக்கேட்ட ஆசிரியரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி,
ஆரல்வாய்மொழி அருகே உள்ள மாதவலாயத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சிலர் கடந்த சில நாட்களாக வகுப்பறையில் வெவ்வெறு வகையில் சேட்டைகள் செய்துவருவதாக கூறப்படுகிறது. அதாவது மாணவிகள் இல்லாத நேரங்களில் அவர்களின் இருக்கைகளை தண்ணீரால் ஈரப்படுத்துவது. வரும்போதும் போகும்போதும் நக்கல் செய்வது, போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.. சேட்டையின் உட்சகட்டமாக மாணவிகளை படம் எடுத்து அதை டிக் டாக் செய்து சமுகவலைதளத்தில் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வீடியே பல செல்போனுக்கு சென்று இறுதியாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கும் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த ஆசிரியர் சம்பந்தபட்ட வீடியோவை தலைமை ஆசிரியரிடம் கொண்டுபோய் காட்டியுள்ளார். இதனால் அதில் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களை பெற்றோர்களுடன் வரவழைத்த தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தி மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அம்மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்த ஆசிரியர் மீது கடும்கோபத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலையில் அந்த ஆசிரியர் பள்ளிக்கூடத்திற்கு வந்த போது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அந்த ஆசிரியர் நிலைகுலைந்துபோனார். இதை பார்த்த சக ஆசிரியர்கள் வந்து மாணவர்களை விலக்கிவிட்டனர்.
இப்பிரச்சனை தலைமை ஆசிரியரிடம் மீண்டும் சென்றது. அவர் உடனே ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் அங்கு சென்று மாணவர்களின் பெற்றோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காமல் தேர்வு எழுத மட்டும் அனுமதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story