நான்கு வழிச்சாலைக்காக திருபுவனையில் மரங்கள் கடைகள் அகற்றம்
திருபுவனையில் நான்கு வழிச்சாலைக்காக மரங்கள், நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன.
திருபுவனை
திருபுவனையில் நான்கு வழிச்சாலைக்காக மரங்கள், நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன.
நான்கு வழிச்சாலை
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே புதுச்சேரியை தொட்டுச் செல்லும் வகையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் இரவு பகலாக விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புதுவை - விழுப்புரம் சாலையில் திருபுவனையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கனவே கண்டமங்கலம் பகுதியில் சாலையோரம் இருந்த மரங்கள், கட்டிடங்கள் அகற்றப்பட்டன.
கடைகள் அகற்றம்
இந்த நிலையில் திருபுவனை பகுதியில் நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டன. 20, 30 ஆண்டுகள் பழமையான பெரிய, பெரிய மரங்கள் எந்திரங்கள் மூலம் வெட்டப்படுகின்றன. மேலும் சாலையோரம் இருந்த 20-க்கும் மேற்பட்ட கடைகளும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதனால் வியாபாரிகள் தவிக்கின்றனர்.
திருபுவனையில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து வணிக வளாகம் அருகில் மாலை நேரம் செயல்பட்டு வந்த உழவர்சந்தை சாலை விரிவாக்க பணியால் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருபுவனை சுற்றுப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே மாற்ற இடத்தில் உழவர்சந்தை செயல்பட கொம்யூன் பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story