திருச்சி சிறை: ரஷ்ய கைதியுடன் தூதரக அதிகாரிகள் சந்திப்பு..!
திருச்சி முகாம் சிறையில் ரஷ்ய நாட்டு கைதியுடன் தூதரக அதிகாரிகள் சந்தித்து விசாரணை நடத்தினர்.
திருச்சி,
திருச்சி, மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் இலங்கைத் தமிழர்கள், வங்கதேசம் ,கென்யா, ரஷ்யா, நைஜீரியா, சூடான் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 160 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து அந்நாட்டு தூதரக அதிகாரிகளிடம் கூறி அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் வங்கதேச கைதி அந்த நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். முகாம்களில் ரஷ்ய நாட்டு கைது ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிப்பது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள ரஷ்ய நாட்டு தூதரகத்தில் இருந்து 2 அதிகாரிகள் நேற்று திருச்சி முகாம் சிறைக்கு வந்து கைதியிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது வெளிநாட்டு கைதி குறித்து அந்நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதனடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகள் 4 மாதத்திற்கு ஒருமுறை இங்கு வந்து கைதியிடம் வசதிகள் குறித்தும் மற்றும் வழக்கு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு செல்வார்கள். இது வழக்கமான ஒன்றுதான் அந்த அடிப்படையில் ரஷ்ய நாட்டு அதிகாரிகள் நேற்று கைதியை சந்தித்து பேசி விட்டு சென்றதாக கூறினர்.
Related Tags :
Next Story