மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் 4 கிராம் தங்க சங்கிலி பறிப்பு
மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் 4 கிராம் தங்க சங்கிலியை பறித்த மற்றொரு பெண்ணை பொதுமக்கள் ‘தர்ம அடி’ கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் 4 கிராம் தங்க சங்கிலியை பறித்த மற்றொரு பெண்ணை பொதுமக்கள் ‘தர்ம அடி’ கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்
புதுச்சேரி நெல்லித்தோப்பு சவரிபடையாச்சி வீதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 33). இவர் லெனின் வீதியில் உள்ள தனியார் திருமண தகவல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு பணியை முடித்து விட்டிற்கு நடந்து வந்தார். அப்போது எதிரே வந்த பெண் ஒருவர் திடீரென விஜயலட்சுமியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் முகத்தை துடைப்பதற்குள் அந்த பெண் அவரது கழுத்தில் கிடந்த 4 கிராம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார். உடனே விஜயலட்சுமி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை தேடினர்.
தர்மஅடி
அப்போது அந்த பகுதியில் ஒரு வீட்டின் உள்ளே புகுந்து அங்குள்ள படிக்கட்டின் அடியில் அந்த பெண் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே அவரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் நெல்லித்தோப்பு டி.ஆர். நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி ரேவதி (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து 4 கிராம் தங்க சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story