119-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 119-வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை. இதனால், சென்னையில் கடந்த பல நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது. இதன்படி 118 வது நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் நேற்று விற்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமின்றி அதே விலை நீடிக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் சூழலில், முதல் நாள் போரால் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்தது. எனினும், அடுத்தடுத்த நாட்களில் பங்கு சந்தைகளின் மதிப்பு உயர்வடைந்தது. தங்கம் விலையிலும் சரிவு ஏற்பட்டது.
இதேபோன்று, சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 119 வது நாளாக இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டு வருகிறது.
முன்னதாக தமிழகத்தில் வர்த்தக உபயோக கியாஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50 ஆக விற்கப்பட உள்ளது. எனினும் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் உயர்வில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கியால் சிலிண்டர் ஒன்றின் விலை மாற்றமின்றி ரூ.915.50க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. வணிக சிலிண்டரின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டதால் உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் உணவு விலை பலமடங்கு உயர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story