குடும்ப தகராறு; தந்தையின் 2-வது மனைவியை கத்தியால் குத்திய வாலிபர்...!
குடும்ப தகராறில் தந்தையின் இரண்டாவது மனைவியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் அழகாபுரம் அருகே உள்ள பெரியபுதூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.
கிருஷ்ணன் நேற்று 2-வது மனைவி நிர்மலா வீட்டில் இருந்து உள்ளார்.
அப்போது முதல் மனைவியின் மகன் சந்தோஷ் என்பவர் அங்கு வந்து உள்ளார். அவரை பார்த்து நிர்மலா ஒருமையில் திட்டி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் சித்தியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு முற்றியதில் கோபம் அடைந்த சந்தோஷ் அங்கு இருந்த கத்தியை எடுத்து சித்தி நிர்மலாவை குத்திவிட்டு தப்பியோடி உள்ளார்.
குத்துப்பட்ட நிர்மலா வலியில் துடித்துள்ளார். இந்த சத்தம் கேட்டு வந்த கணவன் கிருஷ்ணன் அப்பகுதி மக்களின் உதவியுடன் நிர்மலாவை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
இது குறித்து அறிந்த அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story