லஞ்சம் வாங்கியதாக புகார்...? பணியை ராஜினாமா செய்த சப்-இன்ஸ்பெக்டர்...!
தூத்துக்குடியில் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக கங்கை நாத பாண்டியன் பணியாற்றி வந்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன் ஆடு திருடும் கும்பலை குண்டாசில் இருந்து விடுவிப்பதற்காக 3 லட்சம் லஞ்சம் கேட்டு பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக துறைரீதியாக நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியனை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்தனர்.
இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்படாமல் நடவடிக்கை எடுத்து உள்ளதால் தனது பணிணை ராஜினாமா செய்வதாக சப்-இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன் தெரிவித்தார்.
பின்னர், தான் பணியாற்றிய விளாத்திகுளம் போலீஸ் நிலையத்துக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன் தனது ராஜினாமா கடிதத்தை உயர் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
Related Tags :
Next Story