10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக தொழிற்கல்வி பொதுத்தேர்வு அறிமுகம் - பள்ளிக்கல்வித்துறை


10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக தொழிற்கல்வி பொதுத்தேர்வு அறிமுகம் - பள்ளிக்கல்வித்துறை
x
தினத்தந்தி 3 March 2022 10:54 AM IST (Updated: 3 March 2022 10:54 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக தொழிற்கல்வி என்ற பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

2021-22-ம் ஆண்டு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான செய்முறை (பிராக்டிக்கல்) தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை நடைபெறும்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு மே 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடையும். பிளஸ்-1 தேர்வுகள் மே 9-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி முடியும். 10-ம் வகுப்புக்கான தேர்வுகள் மே 6-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி முடியும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அறிவித்தார்.

பிளஸ்-2 தேர்வு முடிவு ஜூன் 23-ந் தேதியிலும், பிளஸ்-1 தேர்வு முடிவு ஜூலை 7-ந் தேதியிலும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 17-ந் தேதியிலும் அறிவிக்கப்படும். இந்த தேதிக்கு முன்புகூட அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக தொழிற்கல்வி என்ற பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தொழிற்கல்விக்கான பாடத் தேர்வு மே 21-ல் நடைபெறுகிறது என்றும் தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் இல்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story