பில்லி சூனியம் எடுப்பதாக கூறி இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த 2 பேர் கைது
பில்லி சூனியம் எடுப்பதாக கூறி இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
பால்கரை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு ரஜப் சேக்(வயது 27) என்ற வாலிபர் அறிமுகம் ஆனார். அப்போது, இளம்பெண்ணுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதை எடுத்தால் நெருக்கடிகள் குறையும் என அவர் கூறினார். இதனை இளம்பெண் நம்பினார். மேலும் ரஜப் சேக் தனக்கு தெரிந்த சாமியார் நாலாச்சோப்ராவில் இருப்பதாகவும், அங்கு தன்னுடன் வரும்படி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இளம்பெண் அவருடன் புறப்பட்டு சென்றார். அவர் சாகாபுதீன் சேக் (50) என்பவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார். பில்லி சூனியம் எடுப்பதாக கூறி இளம்பெண்ணை 2 பேரும் சேர்ந்து கற்பழித்தனர்.
இது பற்றி யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் குறித்து பால்கர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை பிடிக்க சம்பவ இடத்திற்கு சென்றனர். இது குறித்து அறிந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதனையடுத்து அவர்களை வலைவீசி தேடிவந்தனர்.
இந்தநிலையில் அவர்களின் செல்போன் சிக்னல் மூலம் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்த போலீசார், அங்கு விரைந்த்உ சென்று 2 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் இதே பாணியில் மற்ற பெண்களையும் மிரட்டி உள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story