படிப்படியாக மதுவிலக்கு என்று கூறிவிட்டு புதிய மதுக்கடைகளை திறக்க துடிப்பதா? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி


படிப்படியாக மதுவிலக்கு என்று கூறிவிட்டு புதிய மதுக்கடைகளை திறக்க துடிப்பதா? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
x
தினத்தந்தி 3 March 2022 4:13 PM IST (Updated: 3 March 2022 4:13 PM IST)
t-max-icont-min-icon

படிப்படியாக மது விலக்கு என்று கூறிவிட்டு புதிய மதுக்கடைகளை திறக்க துடிப்பதா என்று தமிழக அரசுக்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு என கூறிவிட்டு புதிய மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு  துடிப்பாத என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்து உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ் நாட்டில் புதிதாக மதுக்கடைகளை திறப்பதற்கு பொதுமக்க எதிர்ப்பு தெரிவித்தால், அது குறித்து மாவட்ட கலெக்டர் மறு ஆய்வு செய்வதை கட்டாயமாக்கி விதிகளில் திருத்தம் செயப்பட்டிருப்பதாக
தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் மதுக்கடைகளை திறக்கும் விஷயத்தில்
மக்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளிப்பது போல தோன்றினாலும், இது இனிப்பு கலக்கப்பட்ட நஞ்சு என்பது தான் உண்மை. மது வணிகத்தை அதிகரிக்க அரசு துடிப்பதையே இது காட்டுகிறது. தமிழ்நாட்டில் மதுக்கடைககுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கிராமசபைகளுக்கு உண்டா? 

என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்ககட்சி சார்பிலும், பிற அமைப்புகளின் சார்பிலும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிக கொண்ட அமர்வு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில், இந்நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருக்கிறது.

அதன்படி, ஏதேனும் ஒரு பகுதியில் புதிய மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக்
நிறுவனம் முயலும் போது, அதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கலாம்,

அதை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம், அதன்மீது கலெக்டர் முடிவெடுக்கும் வரை மதுக்கடைகளைத் திறக்க கூடாது. மாவட்ட கலெக்டரின் முடிவில் உடன்பாடு இல்லை என்றால், அதை எதிர்த்து 30 நாட்களில் ஆயத்தீர்வை ஆணையரிடம் மேல்முறையீடு செய்லாம் என அரசு அறிவித்திருக்கிறது.

தமிழக அரசின் இந்த நிலைப்பாடு என்பது புதிய மதுக்கடைகளை திறப்பது தொடர்பானது. இதிலும் கூட மதுக்கடைகள் திறப்பதை தடுக்கும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்படவில்லை,அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிகாரம் மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது. 

மாறாக, மதுக்கடைக திறப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மாவட்ட கலெக்டர், ஆயத்தீர்வை ஆணையருக்கும் மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மக்களுக்கு எந்தவித ஜனநாயக உரிமையும் வழங்கப்பட்டுவிடவில்லை.
அதனால், தமிழ்நாட்டின் மதுவணிகச் சூழல் எந்த வகையிலும் மாறிவிடாது என்பது தான் உண்மையாகும். ஆனால், தமிழ்நாட்டின் இன்றையத் தேவை புதிய மதுக்கடைகளைத் திறப்பது அல்ல, ஏற்கனவே திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடுவது தான். 

அதற்காகத் தான் பாட்டாளி மக்ககட்சி 40 ஆண்டுகளாக போராடி வருகிறது. 2003-ம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனம் சில்லறை மது வணிகத்தைத் தொடங்கிய
போது, தமிழ்நாட்டில் 7 ஆயிரத்திற்கும் கூடுதலான மதுக்கடைக இருந்தன. அடுத்த 14 ஆண்டுகளில் பா.ம.க. நடத்திய சட்டப்போராட்டம்  மற்றும் அரசியல் போராட்டங்களின் பயனாக ஆயிரத்திற்கும் கூடுதலான
கடைகள் மூடப்பட்டன. 

அதனால், 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை
6 ஆயிரத்து 323 ஆக குறைந்தன. தொடர்ந்து பாட்டாளி மக்ககட்சி தொடர்ந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்து 321 மதுக்கடைகள் தமிழகத்தில் மட்டும் மூடப்பட்டன.


அதனால், தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 2-ஆக குறைந்தன. எனினும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, சாதகமான தீர்ப்பை பெற்று, மூடப்பட்ட கடைகளில் 2 ஆயிரத்து 400 கடைகளை மீண்டும் திறந்தது. அதனால், தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 5ஆயிரத்து 402-ஆக உயர்ந்திருக்கிறது. 

இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதால், மதுக்கடைகளை
படிப்படியாக குறைக்க வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பினரின் விருப்பமாகும். மதுவிலக்கு தொடர்பாக தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளிக்கவில்லை என்றாலும் கூட, தமிழகத்தின்
முதல- அமைச்சரான பிறகு அளித்த ஒரு நேர்காணலில், தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறைபடுத்துவதே தமது நோக்கம் என்றும், அதை படிப்படியாக செய்வோம் என்றும் அறிவித்திருந்தார். 

அதை நிறைவேற்றும் எண்ணம் இருந்தால் தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

மாறாக, தமிழ்நாட்டில் புதிய மதுக்கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு முயல்கிறது. புதிய மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதால் தான், தமிழக அரசு அதற்கான விதிகளை வகுத்திருக்கிறது.

இல்லாவிட்டால், இனி புதிய மதுக்கடைகளை தமிழக அரசு திறக்காது; இருக்கும் மதுக்கடைகளை படிப்படியாக மூடப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதியளித்திருக்க முடியும். 

அவ்வாறு செய்யாதன் மூலம் மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டமிடுவதை அறிய முடியும். தமிழ்நாடு மதுவால் சீரழிந்து வரும் நிலையில், மேலும், மேலும் மதுக்கடைகளை திறப்பது தமிழகத்தையும்,
தமிழகத்தின் இளைய தலைமுறையினரையும் மீட்க முடியாத அளவுக்கு சீரழித்து விடும். 

அத்தகைய பாவத்தை தமிழக அரசு செய்து விடக் கூடாது. எனவே, புதிய மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிட்டு, ஏற்கனவே உள்ள மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story