ஆசிரியர் பணி நியமன போட்டித்தேர்வு தொடர்பாக போராட்டம் : பட்டதாரிகள் கைது


ஆசிரியர் பணி நியமன போட்டித்தேர்வு தொடர்பாக போராட்டம் : பட்டதாரிகள் கைது
x
தினத்தந்தி 3 March 2022 5:35 PM IST (Updated: 3 March 2022 5:35 PM IST)
t-max-icont-min-icon

டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த 150க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை ,

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் ,மற்றும் ஆசிரியர்  தகுதி தேர்விற்கு பிறகு வேலை வாய்ப்பிற்காக மற்றோரு போட்டி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று இரு கோரிக்கையை முன்வைத்து பட்டதாரிகள் போராட்டம் நடத்தி வந்தனர் 

இந்நிலையில் இன்று இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடந்தது   பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த முயற்சி செய்தனர்.

இதனால் டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த 150க்கும் மேற்பட்ட  பட்டதாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர் 

Next Story