திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு!


திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு!
x
தினத்தந்தி 3 March 2022 6:36 PM IST (Updated: 3 March 2022 6:36 PM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை பேரூராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் 9 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.


திசையன்விளை,

திசையன்விளை பேரூராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் 9 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திசையன்விளை பேரூராட்சியில் உள்ள 18 இடங்களில் 9 இடங்களை அதிமுக வென்றுள்ளது.

முன்னதாக, தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக கவுன்சிலர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது,  திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ள நிலையில், மொத்தமாக 10 வார்டுகள் அதிமுக வசம் உள்ளது. 

இந்நிலையில், திமுகவினர் சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிகளை கைப்பற்றுவதற்காக வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்களை மிரட்டி வருகின்றனர். இது தொடர்பாக போலீசுக்கு புகார் அளித்தும் அவர்கள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும், வெற்றி பெற்ற திசையன்விளை பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் 9 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையில், திசையன்விளை பேரூராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் 9 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தலைவர் துணைத்தலைவர்  பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் போது தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது.


Next Story