கஜினி முகமது போல் வரும் கொரோனாவை வெல்வோம்; ராதாகிருஷ்ணன்
கஜினி முகமது போல் கொரோனா பாதிப்பு எத்தனை முறை திரும்ப திரும்ப வந்தாலும் தொடர்ந்து வெற்றி கொள்வோம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3வது அலையின் தீவிரம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று 292 பேருக்கு உறுதியாகி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலான தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கஜினி முகமது போல் கொரோனா பாதிப்பு எத்தனை முறை திரும்ப திரும்ப வந்தாலும் தொடர்ந்து வெற்றி கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி மூலம் 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டாலும், கடந்த 2 ஆண்டுகளாக மற்ற நோய்களையும் கட்டுப்படுத்தி உள்ளோம். மக்களின் முழு ஒத்துழைப்பால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளோம் என்றும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story