தமிழர்களை மீட்க தனி கவனம் செலுத்திடுக - வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


தமிழர்களை மீட்க தனி கவனம் செலுத்திடுக - வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 3 March 2022 8:47 PM IST (Updated: 3 March 2022 8:47 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் தமிழர்களை மீட்க தனிக் கவனம் செலுத்திட வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டிடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷியா கைப்பற்றி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. அந்த வகையில்,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மாணவர்களை மீட்பதற்கான தமிழக அரசின் குழுவுக்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த சுமார் 193 மாணவர்கள் மட்டுமே இதுவரை தாயகம் திரும்பியுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தனி கவனம் செலுத்த வேண்டும். ரஷியா வழியாக மாணவர்களை அழைத்து வர மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராய வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் அழைத்து வர தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story