மத்திய அரசின் மீட்புக்குழு செயல்படும் வேளையில், தமிழக குழுவை அனுப்ப என்ன தேவை? அண்ணாமலை அறிக்கை
உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசின் மீட்புக்குழு செயல்படும் வேளையில் தமிழகம் ஒரு தூதுக்குழுவை அனுப்ப என்ன தேவை? என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து மாணவர்களையும் பிரதமர் தலைமையில் உலக நாடுகளே வியக்கும்படி, தாயகம் மீட்கும் நடவடிக்கையை, மத்திய அரசின் மீட்புக்குழு சிறப்பாக செயல்படுத்தும் இந்த சிக்கலான வேளையில் தமிழகம் ஒரு தூதுக்குழுவை அனுப்ப என்ன தேவை?. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி என்று பல உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்கமுடியாமல் திகைத்து நிற்கும் வேளையில், தூதரக ராஜதந்திரத்தின் மூலம் போர்க்களத்தில் இருந்து நாட்டு மக்களை மீட்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.
இந்திய நாட்டின் உதவியை மற்ற நாடுகள் எல்லாம் நாடி வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகம் செய்யவேண்டிய முதல் பணியே பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, மாநிலத்தில் தேவையான உதவிகளை செய்வது தான். உன்னதமான நீட் தேர்வை, அரசியலாக்கி மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகி, தற்போது மாணவர்கள் பெரிதும் வரவேற்கும் நீட் தேர்வை உக்ரைன் போருடன் சம்பந்தப்படுத்தி, குழப்பத்தை அதிகரித்து வரும் முதல்-அமைச்சர், மாநிலங்களுக்கு சம்பந்தமில்லாத மீட்பு நடவடிக்கையிலும் தலையிட்டு, மாணவர்களின் உயிரோடு விளையாட தி.மு.க. அரசு முடிவு செய்து, இதையும் அரசியலாக்கும் செயல், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள வீரர்களுக்கும், மாணவர்கள் உயிருக்கும் இடையூறாகும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
அறிக்கைக்கு முரணாக உள்ளது
இதேபோல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு தூண்டப்பட்ட வழக்கிலே விசாரணை நடத்தி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தன் விரிவான அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறது. ஆனால் ஆளுங்கட்சியின் மீது அச்சம் கொண்டு ஒரு சிலர் சொல்கின்ற கருத்துகள், முற்றிலும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கைக்கு முரணாக உள்ளது. அந்த அறிக்கையில், தற்கொலை குறித்து புலனாய்வு அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில் பல நடைமுறை குறைபாடுகள் இருக்கிறது. பள்ளிச்சிறுமியை கிறிஸ்தவ மதத்துக்கு கட்டாயமாக மதம் மாற்றுவது குறித்து அழுத்தம் கொடுப்பதாக குடும்பத்தினர் கொடுத்த அனைத்து புகார்களையும் விசாரணை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பள்ளி விடுதி நிர்வாகத்தினர் மாணவியின் மரணம் குறித்த உண்மைகளை மூடி மறைக்க வெளிப்படையாக செயல்பட்டனர் என்பது உள்பட பல விஷயங்களை கூறி கல்வி நிறுவனத்தின் மீதும், மாவட்ட நிர்வாகத்தின் மீதும், விசாரணை அதிகாரிகள் மீதும் பல விதிமீறல்களை வெளிப்படுத்தியுள்ளது. இத்தனை கடுமையான வார்த்தைகளுடன் வந்திருக்கும் அறிக்கையை உண்மைக்கு புறம்பான, பொய்யான, தவறான தகவல்களை மக்களை ஏமாற்றுவதற்காக, பொய் செய்திகள் பரப்புவதை பா.ஜ.க. சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story