ரஷிய தாக்கிய சபோரோஷியா அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது - உக்ரைன் தகவல்


ரஷிய தாக்கிய சபோரோஷியா அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது - உக்ரைன் தகவல்
x
தினத்தந்தி 4 March 2022 10:26 AM IST (Updated: 4 March 2022 10:27 AM IST)
t-max-icont-min-icon

ரஷிய தாக்கிய சபோரோஷியா அணுமின் நிலையம் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீவ்,

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே 9வது நாளாக போர் நீடித்து வருகிறது . இந்த நிலையில் தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷிய படைகள் ஆக்ரோஷமாக நேரடியாக தாக்குதல் நடத்தின. அப்போது சபோரோஷியாவிலுள்ள அணுமின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்தநிலையில்,  ரஷிய தாக்கிய  சபோரோஷியா அணுமின் நிலையம் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும்  ரஷிய தாக்குதலால் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அனுமின் நிலைய இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். 

சபோரோஷியா அணுமின் நிலையத்தின் முக்கிய உபகரணங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் உக்ரைன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story