சிவகாசியை உண்மையான குட்டி ஜப்பானாக மாற்றுவேன்: சிவகாசி மாநகராட்சி மேயர் பேட்டி

சிவகாசியை உண்மையான குட்டி ஜப்பானாக மாற்றுவேன்: சிவகாசி மாநகராட்சி மேயர்  பேட்டி
x
தினத்தந்தி 4 March 2022 12:48 PM IST (Updated: 4 March 2022 12:48 PM IST)
t-max-icont-min-icon

மேயராக தேர்வு செய்யப்பட்ட மேயர் சங்கீதா அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

சிவகாசி,

சிவகாசி நகராட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற சங்கீதா இன்பம் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேயராக தேர்வு செய்யப்பட்ட மேயர் சங்கீதா அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

சிவகாசி மேயராக பொறுப்பேற்றுள்ள சங்கீதா கூறியதாவது:-

சிவகாசி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். தரமான சாலைகள் மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும். பட்டாசு, அச்சுத் தொழில் உள்ளிட்டவைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிவகாசியை உண்மையான குட்டி ஜப்பானாக மாற்றுவேன்" என கூறினார்.

Next Story