சாயல்குடி பேரூராட்சி தலைவர் தேர்வு; துணைதலைவர் தேர்தல் ஒத்திவைப்பு..!
சுயேட்சைகள் வசமான சாயல்குடி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
ராமநாதபுரம்,
சாயல்குடி பேரூராட்சி நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பேரூராட்சியில் 1வது வார்டில் போட்டியிட்ட மாரியப்பன் மற்றும் இரண்டாவது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி பானுமதி ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர்.
இதில் சாயல்குடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் போட்டியிட்ட மாரியப்பன் வெற்றி பெற்று சாயல்குடி பேரூராட்சி தலைவராக தேர்வாகியுள்ளார். தேர்தல் அலுவலராக செயல்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று மாலை நடைபெறவிருந்த துணைத் தலைவர் தேர்தலுக்கு வார்டு உறுப்பினர்கள் யாரும் வராததால் சாயல்குடி பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story